×

நரிக்குறவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம்: ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:நரிக்குறவர்களை கடந்த சில மாதத்திற்கு முன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் மிகவும் பின்தங்கிய நரிக்குறவர்கள் சமுதாயம் முன்னேற ஒன்றிய அரசு வழிவகுத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் அரசு நடத்தும் குரூப் 2 தேர்வு எழுத பலர் விண்ணப்பித்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் மிகவும் நலிவடைந்த, குறைந்த அளவிலுள்ள நரிக்குறவர்கள், பெரும்பான்மையாகவுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில், அவர்களுடன் போட்டியிட முடியாமல், முன்னேற்றம் அடைய முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவித்ததால் அவர்கள் வாழ்க்கையில் ஓர் வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வுக்கு விண்ணபித்து, முதல் தேர்வில் வெற்றிப்பெற்று, மேற்கொண்டு நடைபெற இருக்கும் நேர்முக தேர்விற்கு செல்ல இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய அங்கீகாரமும், இட ஒதுக்கீட்டில் உரிய பங்கீட்டையும் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

The post நரிக்குறவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம்: ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Union Govt. ,Chennai ,State Congress ,Foxes ,Union government ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம்,...